எளிய மருத்துவ குறிப்புகள்

Report Print Meenakshi in மருத்துவம்
0Shares
0Shares
lankasri.com

நம் உடலில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு நாம் மருத்துவமனைக்கு செல்லவேண்டியது இல்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகிக்கும் பொருள்கள் மூலமாகவே அவற்றினை சரிசெய்யலாம்.

இந்த பொருள்கள் வலிகளை போக்குவது மட்டுமல்லாமல் உடலில் உள்ள கிருமிகளை அகற்றவும் செய்கிறது.

  • பேக்கிங் சோடாவினை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை அதில் சிறிது ஊறவைக்கவேண்டும். இதன் மூலமாக கால் பாதங்களில் ஏற்படும் வலிகள் குறைவது மட்டுமல்லாது. கிருமிகளும் அகற்றப்படுகிறது.
  • கால் கப் லிஸ்டரினை(Listerine) வெதுவெதுப்பான நீரில் ஊற்றி காலை அதில் ஊறவைத்தால் காலில் உள்ள நோய் தொற்றினை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகளானது அகற்றப்படுகிறது.
  • உடலில் வெயிலினால் ஏற்படும் கறுமையினை நீக்குவதற்கு, மிதமான சூட்டில் உள்ள நீரில் 3 ஸ்பூன் டீ தூளினை போட்டு சூடாக்கி, பின் அதில் பனிக்கட்டிகளை சேர்த்து கறுமை உள்ள இடத்தில் துணியினை கொண்டு போட வேண்டும்.
  • சிறிது ஆப்பிள் வினிகரை நீரில் சேர்த்து நன்கு வாயினை கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.
  • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவினை நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்தி நெஞ்செரிச்சலை தடுக்கும்.
  • கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டால் சிறிது தேனை பிளாஸ்திரியின் கீழ் வைத்து மூடிவிட்டால் சீக்கிரமாக காயம் ஆறிவிடும்.
  • இஞ்சி காப்பியில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து அருந்துவதன் மூலம் குமட்டல் ஏற்படுவதை தடுக்கலாம்.
  • ஒன்றிரண்டு பூண்டினை நசுக்கி அதனை சிறிது நீரில் கலந்து அந்த நீரினால் வாயினை கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.
  • தூங்கும் முன் செர்ரி பழத்தினை சாப்பிட்டால் அதில் உள்ள மெலட்டின் நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments