கண்கட்டி வராமல் தடுக்க உடனடியாக இதை செய்திடுங்கள்!

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

கடுமையான வெயில் தாக்கத்தினால் உடலில் உஷ்ணம் அதிகரித்து கண்ணின் இமை மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகி, கண்ணில் வலி மற்றும் உறுத்தலை உண்டாக்கும்.

அந்த வகையில் உருவாகும் கண் வலிகள் சில நேரத்தில் கண் கட்டியாக மாறிவிடுகிறது.

கண்கட்டி வராமல் தடுக்க பாட்டி வைத்தியம்
  • அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது.
  • அகத்திக் கீரையை அரைத்து, அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, குளித்தால் உடல் சூடு குறையும்.
  • முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன், கண்கட்டி வராமலும் தடுக்கலாம்.
  • வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து அதை சாப்பிட்டு வந்தால், உடலின் அதிகப்படியான சூடு குறையும்.
  • வெங்காயத் தோல் மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து காயவைத்து, அதை பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
  • வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்தால், உடல் சூட்டை தணித்து, கண்கட்டி வராமல் தடுக்கலாம்.
குறிப்பு

கண்கட்டி வராமல் தடுக்க அன்றாடம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். விட்டமின் A சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments