சளி காய்ச்சலை குணமாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

காய்ச்சல் மற்றும் சளி தொல்லை பிரச்சனைகளை மாத்திரை, மருந்து, ஊசி இன்றி குணமாக்க நமது முன்னோர்கள் கூறிய இயற்கையில் உள்ள சில அற்புத வழிகள் இதோ!

பூண்டு

பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு வலிமை சேர்ப்பது மட்டுமில்லாமல், காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனையை குணமாக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் ரசமாக சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

advertisement

மஞ்சாள் தூள்

பாலில் மஞ்சாள் தூள் மற்றும் மிளகுப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சல் இரண்டே நாட்களில் குணமாகும்.

கோழி சூப்

கோழி அல்லது ஆட்டுக்கால் சூப், சளி மற்றும் காய்ச்சலை குணமாக்க அருமையான மருந்தாக பயன்படுகிறது. எனவே நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப்பை குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் A அதிகமாக உள்ளது. எனவே இது உடலுக்கு வலுவை சேர்த்து, சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து விரைவாக விடுபட உதவுகிறது.

மீன்

விட்டமின் D உணவுகளான பால் மற்றும் மீன் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால், அது சளி, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments