ஓவியா செய்து கொண்ட கப்பிங் தெரபி பற்றி தெரியுமா?

Report Print Fathima Fathima in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

கப்பிங் தெரபி என்பது பண்டைய கால சிகிச்சை முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சீனர்களால் உருவாக்கப்பட்டது என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

கண்ணாடி அல்லது மூங்கிலான கோப்பைகளை பயன்படுத்தி எலும்பு இடமாற்றம், தசைப்பிடிப்பு, காய்ச்சல் உடல்வலி, ரத்த சுத்திகரிப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைக்கு கப்பிங் தெரப்பி சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.

advertisement

கப்பிங் தெரப்பி மூன்று வகைப்படும்

  • உலர்ந்த கப்பிங்
  • நெருப்பு கப்பிங்
  • ஈரமான கப்பிங்

உலர்ந்த கப்பிங் தெரப்பி

முறைான ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவது மற்றும் தசை பிடிப்புகளைச் சரி செய்வது போன்ற பலன்களை வழங்கக் கூடியதே உலர்ந்த தெரப்பியாகும், பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இச்சிகிச்சையை மேற்கொள்வர்.

நெருப்பு கப்பிங்

சிறு உருண்டை வடிவிலான பஞ்சை சுத்தமான சாராயத்தில் நனைத்து நெருப்பைப் பற்றவைத்து கண்ணாடிக் குவளையை தோலுடன் சேர்த்து அளுத்துவதேயாகும், இவ்வாறு செய்வதனால் தசைப்பிடிப்பு, கழுத்து வலி, கவலை ஒற்றைத் தலைவலி, வாதம் போன்ற நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

ஈரமான தெரப்பி

தோலின் மேற்பரப்பில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதன் வழியாக் தூய்மையாற்ற ரத்தக் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றுவது ஒரு முறையாகும்.

நமக்கு வரக்கூடிய பல நோய்களை மறைமுகமாகவோ நேரடியாகவே ரத்தத்துடன் தொடர்புபட்டு அதன் அடிப்படையில் தூய்மையற்ற ரத்தத்தை நீக்குவதன் மூலமாக நோய்கள் குணமடைய வாய்ப்புண்டு.

கப்பிங் தெரப்பி செய்து கொண்ட பிரபலங்கள்

ஒலிம்பிக் போட்டியில் 22 தங்கப்பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு காரணமாக கப்பிங் தெரப்பி செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா கப்பிங் தெரப்பி செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியானது.

மன அழுத்தத்தை போக்குமா கப்பிங் தெரப்பி?

மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தால் சிலருக்கு தற்கொலை எண்ணம் வரும், கப்பிங் தெரப்பி நமது உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை நமது உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.

எனவே உடல் ரீதியான பிரச்சனைகள் சரியாகி மன ரீதியான அழுத்தத்தை குறைக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

கப்பிங் தெரப்பியின் பக்க விளைவுகள்
advertisement

கப்பிங் தெரப்பி செய்த பின்னர் சருமத்தில் ஏற்படும் வட்ட வடிவிலான தழும்புகளை சரியாக பராமரிக்காவிட்டால் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த சிகிச்சை முறையை செய்து கொள்ள விரும்பினால் மருத்துவரும், இடமும் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- Dina Mani

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்