சிறு வயதில் ருசித்திருப்போம்!.. வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

Report Print Fathima Fathima in மருத்துவம்
0Shares
0Shares
Cineulagam.com

நெல்லிக்கனியானது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், கை மருத்துவம், யுனானி போன்ற அனைத்து வகையான மருத்துவ முறைகளிலும் பிரதான இடம் வகிக்கிறது.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வந்தால் உடலையும், மனத்தையும் என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

நெல்லிக்கனியில் இரு வகைகள் உண்டு, கருநெல்லி மற்றும் அருநெல்லி.

  • அருநெல்லிச் சாற்றில் சீரகம், நெல் பொரி, திப்பிலி போன்றவற்றை சேர்த்து கஷாயம் செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் வாந்தி நிற்கும்.
  • இதேபோன்று அருநெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தாலும் வாந்தி நிற்கும்.
  • அருநெல்லி, நெல்லி இரண்டையும் சம அளவு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கோளாறுகள் சரியாகும்.
  • இதன் இலையை அரைத்து புளித்த மோரில் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சரியாகும்.
  • அருநெல்லிக்காய் சாற்றை தினமும் 30 மில்லி என்ற அளவில் சாப்பிட்டால் உள் சூடு, வேக்காடு மற்றும் குடல் புண் குணமாகும்.
  • பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் இதை அனைத்திலும் 20 கிராம் சாறு எடுத்து, அதில் படிகார பஸ்பத்தை(ஒரு கிராம்) அளவுக்கு குடித்து வர வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்