கற்றாழையில் மறைந்துள்ள அற்புதம்! எப்படி பயன்படுத்த வேண்டும்?

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, ரயில் கற்றாழை அல்லது இராகாசி மடல் என்னும் பல பிரிவுகளில் கற்றாழை அழைக்கப்படுகிறது.

ஆனால் இவற்றுள் சோற்றுக்கற்றாழையே நமக்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.

சோற்றுக் கற்றாழையில் விட்டமின்களான A, C, E, B1, B2, B3, B6 மற்றும் B12, ஃபோலிக் அமிலம், கோலின், அமினோ அமிலம், ஃபேட்டி அமிலம், நியாசின், ஆகியவை நிறைந்துள்ளது.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்
  • வெயிலில் சென்று வந்த பின் சோற்றுக் கற்றாழையை நறுக்கி முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தின் கருமை நிறம் மாறும்.
  • சோற்றுக் கற்றாழையின் சாற்றை அடிபட்ட காயங்கள் அல்லது தீக்காயங்கள் மீது தடவினால் அதன் வீக்கம் குறைந்து காயம் விரைவில் குணமாகும்.
  • கண்களில் அடிபட்டல் அல்லது கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்து கண்களில் கட்டி கொண்டு இரவில் உறங்க வேண்டும். இம்முறையை தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்ற விரைவில் குணமாகும்.
  • கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் கட்டி, தொங்க விட்டு அதிலிருந்து சொட்டும் நீரை சேகரித்து அதை சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்கள் ஏற்படும் அரிப்பு, கண் சிவப்பு போன்ற கண்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
  • சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் காயவைத்த பின் அதை வடிகட்டி குளிக்கும் போது பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சியாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்