உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் வழிகள்

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

சளி பிடித்து விட்டால் சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும். இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் இதோ,

சளியை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும்?

  • 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து, அதை தினமும் 3-4 முறை குடித்து வர, சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

  • 1 டம்ளர் நீரில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

  • 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அதை தினமும் குடித்து வர அதிகப்படியான சளி உற்பத்தி தடுக்கப்படும்.

  • ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகை இலைகளை போட்டு, அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர, சளி விரைவில் வெளியேறிவிடும்.

  • எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர, சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்