கரும்பு சாப்பிடவுடன் தண்ணீர் குடிக்ககூடாது: ஏன் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in மருத்துவம்
0Shares
0Shares
lankasri.com

கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது, ஏனெனில் வாயில் ஒருவித எரிச்சல் ஏற்பட்டு சிறு சிறு கொப்பளங்கள் ஏற்படும்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும், இதனால் தண்ணீரை உடனே குடிக்ககூடாது.

கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது, இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.

இதனால், நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்