லிபியாவில் கைதான தீவிரவாதிக்கு மான்செஸ்டர் தாக்குதலில் தொடர்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

மான்செஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் சகோதரர், லிபியாவில் ஐ.நா உயரதிகாரி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலைச் சேர்ந்தவன் என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லிபியாவுக்கான ஐ.நா சிறப்பு தூதராக செயல்பட்டவர் Martin Kobler. இவர் மீது தாக்குதலை தொடுக்கும் சதித்திட்டத்தில், மான்செஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சல்மான் அபேடியின் சகோதரர் ஹாஷிம் அபேடி ஈடுபட்டிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த சதித்திட்டத்தை முறியடித்திருந்த லிபியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார், அதில் தொடர்புடைய ஹாஷிம் அபேடியை கடந்த செவ்வாய் அன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக ஹாஷிம் அபேடியை தீவிரமாக கண்காணித்து வந்த பொலிசார் மான்செஸ்டர் தாக்குதலின் அடுத்த நாள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி திங்களன்று நடந்த தாக்குதலில் தமது சகோதரர் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் லிபியா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் குழுவினருடன் இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து தங்களிடம் போதிய ஆதாரம் இருப்பதாகவும் லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments