கத்தாருக்கான விமான சேவையை நிறுத்தியது பிரபல ஏர்வேஸ் நிறுவனம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கத்தாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதன் எதிரொலியாக அந்த நாட்டுடனான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டிப்பதாக பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் தெரிவித்துள்ளன.

advertisement

அடுத்த 48 மணிநேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள இருப்பதாக குறித்த 4 நாடுகளும் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து 48 மணிநேரத்தில் தங்களின் தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

அதேபோல் பஹ்ரைனில் உள்ள கத்தார் மக்களும் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கத்தார் உடனான விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாகவும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் கத்தார் அரசு, செய்தி ஊடக ஊடுருவல், ஆயத பயங்கரவாத நடவடிக்கை, பஹ்ரைனில் நாசவேலையை செய்திடவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் ஈரானிய குரூப்புகளுக்கு நியுதவி செய்வதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோஹாவுக்கு நாள்தோறும் 4 முறை விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்துவதாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கத்தார் நாட்டு மக்கள் திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments