ஒற்றைப் புகைப்படத்தால் உலகை உலுக்கிய சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்திற்கு மறக்க முடியாத அடையாளச் சின்னமாக அமைந்த சிறுவன் தான் Omran Daqneesh.

முகத்தில் ரத்தக் கறையுடன், வான் தாக்குதலால் ஏற்பட்ட புழுதியை உடலெங்கும் அப்பிக்கொண்டும், அதிர்ச்சி நீங்காத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவனின் ஒற்றைப் புகைப்படம் உலகையே ஒரு கணம் உலுக்கி இருந்தது.

ஆனால் தற்போது அந்த சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

சிரியாவின் ஆசாத் அரசுக்கு ஆதரவாக செயல்படும் லெபனான் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அந்த சிறுவனின் தந்தையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரத்தக்கறை தோய்ந்த சிறுவனின் புகைப்படம் முதலில் வெளியானபோது அவனது குடும்பத்தினர் எவரும் ஊடகங்களுடன் கருத்து தெரிவிக்க மறுத்து வந்தனர்.

ஆசாத் ஆதரவாளர்கள் எவரேனும் தங்கள் குடும்பத்தினரை குறிவைக்கலாம் என்ற அச்சமே அதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

மட்டுமின்றி தற்போது சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் Kinana Allouche ஆசாத் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இவர் ஆசாத அரசுக்கு எதிராக போராடும் போராளிகளின் சடலங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மட்டுமின்றி வான் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை பார்த்து சிரித்த முகத்துடன் இவர் வெளியிட்ட காணொளியும் கண்டனங்களை எதிர்கொண்டது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments