கத்தாரில் பால் கூட கிடைக்கவில்லை: தவிக்கும் தமிழக பெண்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் திங்களன்று துண்டித்துள்ளன.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து வெளிநாடுகளில் இருந்து பணி மற்றும் கல்வி நிமித்தமாக கத்தார் சென்றுள்ள மக்களும் பதற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே கல்ப் நாடுகள் கத்தாருடனான அனைத்து இணைப்புச் சாலைகளையும் மூடியுள்ளன. மேலும் கல்ப் நாடுகளில் உள்ள கத்தார் நாட்டு மக்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா எல்லையை ஒட்டியுள்ள கத்தார் நாட்டின் 80 சதவீத உணவுத் தேவையை அண்டை நாடுகளான சவுதி மற்றும கல்ஃப் அரபு நாடுகளே மூலதனமாக உள்ளன.

இந்நிலையில் எல்லை மூடப்படுவதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

குழந்தைகளுக்கு பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்று அங்கு வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இலக்கியா கபிலன் என்பவர் கூறியுள்ளார்.

அதுவும் ரமலான் மாதத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments