ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பேஸ்புக் குழு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஈராக்கில் இருந்து செயல்படும் பேஸ்புக் குழுவானது ஐ.எஸ் ஆதரவு நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் இருந்து செயல்படும் Hammam al-Alil Revolution என்ற பேஸ்புக் குழுவானது ஐ.எஸ் ஆதரவாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுவரை இந்த குழுவானது 11 தீவிரவாதிகளை மர்மமான முறையில் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி வெளியிட்ட பேஸ்புக் பதிவு ஒன்றில், மிக விரைவில் ஐ.எஸ் ஆதரவு குடும்பங்கள் வேட்டையாடப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அடிப்படைவாத குழுவில் இணைந்தது குறித்து அவர்கள் வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அந்த பேஸ்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த Hammam al-Alil நகரம் கடந்த ஆறு மாதம் முன்பு கூட்டுப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அப்போது இருந்தே குறித்த குழுவானது ஐ.எஸ் ஆதரவாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருகின்றது.

குறித்த குழுவில் உறுப்பினராக செயல்பட்டுவரும் ஒமர் எனும் இளைஞர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இது ஒரு திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கை மட்டுமே, எங்கள் குடும்பத்தினரை அவர்கள் நோகடித்தார்கள், நாங்கள் தற்போது அவர்கள் குடும்பத்தினரை பழி தீர்க்கிறோம் அவ்வளவே என்றார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்கலையும் இழந்த சில இளைஞர்கள் உருவாக்கிய இந்த குழுவினரின் நடவடிக்கைகள் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரியும் எனவும், ஆனால் அவர்கள் இதில் தற்போது தலையிடப்போவதில்லை எனவும், அதற்கான காலம் நெருங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments