ஈரான் ராணுவ உயரதிகாரிகளை கைது செய்த சவுதி ராணுவம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று உயரதிகாரிகள், சவுதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட மர்ஜன் எண்ணைக் கிணற்றின் அருகாமையில் உள்ள கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

advertisement

அப்போது, சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன் மூன்று மர்மப் படகுகள் தங்கள் நாட்டு கடற்பகுதியை கடந்து செல்வதை அவர்கள் கவனித்தனர்.

இதையடுத்து, சவுதி கடற்படை வீரர்கள் தங்களது அதிவேக படகுகள் மூலமாக அந்த மர்மப் படகுகளை விரட்டிச் சென்றுள்ளனர்.

அவற்றில் ஒரு படகு மட்டும் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. இரண்டு படகுகள் அவர்களிடம் பிடிபடாமல் தப்பிச் சென்று விட்டன. சிக்கிய ஒரு படகில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும், மேலும் அந்த படகில் இருந்த ஈரானிய ராணுவ உயரதிகாரிகளை சவுதி அரேபியா ராணுவம் கைது செய்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மட்டுமின்றி இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததாகவும் சவுதி செய்தி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

அதேவேளையில், தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு மீன்பிடி படகு காற்றின் போக்கால் திசைமாறி சவுதி அரேபியா நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து விட்டதாகவும் அந்தப் படகின்மீது சவுதி அரேபியா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழ்ந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments