சவுதி இளவரசரை கைது செய்த மன்னர்: நாட்டு மக்களின் ரியாக்‌ஷன் என்ன?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி இளவரசர் செய்த கொடூர செயலுக்காக அவரை கைது செய்த சவுதி மன்னருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அரசு மீதான மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல்லஜிஸ் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பலரை இரத்தம் சொட்ட சொட்ட அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளவரசருக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்து மற்றும் மாதாந்திர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்ட பணம் ஆகியவை நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகனான இளவரசரை சவுதி மன்னர் சல்மான் கைது செய்வாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.

இதையடுத்து தவறு செய்த தனது மகனை கைது செய்ய சல்மான் உத்தரவிட்டார். அதன்படி அப்துல்லஜிஸ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மகன் என்றும் பாராமல் சல்மான் அவரை கைது செய்துள்ளதற்கு மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதோடு அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்