சவுதி அரசரின் அரண்மனை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பாதுகாவலர்கள் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Seylon Bank Promotion

சவுதி அரேபியா அரசரின் அரண்மனை மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பாதுகாப்புப்பணியில் இருந்தவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜித்தாவில் அங்குள்ள அரசருக்கு சொந்தமான அரண்மனை அமைந்துள்ளது.

இந்த அரண்மனையில் திடீரென்று நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அவரை அரண்மனை வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது உயர்மட்ட அமைச்சர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலில் ஈடுபட்டவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மன்சூர் அல்-அராமி(28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து இந்த பகுதிக்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்