சவுதி மன்னர் முகமது சல்மான் ராஜினாமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபிய மன்னர் சல்மான் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சவுதியில் மன்னர் சல்மான் (81) தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவரது மகன் முகமது (32) பட்டத்து இளவரசராக உள்ளார்.

மன்னருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அரச குடும்பத்து இளவரசர்கள் 11 பேர் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

மட்டுமின்றி பட்டத்து இளவரசர் சல்மான் முகமதுவுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவந்த இளவரசர் மிக்ரின் ஏமன் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

குறித்த விபத்தானது திட்டமிட்ட படுகொலை எனவும், சவுதி ராணுவமே இதை மேற்கொண்டது என இஸ்ரேல் நாளேடு ஒன்று உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுருந்தது.

இந்நிலையில் வயது முதுமை காரணமாக மன்னர் சல்மான் விரைவில் பதவி விலகுவார் என்றும் பட்டத்து இளவரசர் முகமது மன்னர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை மறுத்துள்ள அரசு வட்டாரம், மன்னர் மரணம் அடையும் வரை பதவியில் நீடிப்பார் என்றும் கூறியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்