சவுதியில் ஓரினச்சேர்க்கை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கைது: என்ன தண்டனை?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

சவுதியில் ஓரினச்சேர்க்கை திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில் இதில் கலந்து கொண்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் மெக்கா நகரில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், திறந்த வெளியில் நடைபெறும் ஒரு நிகழ்வில் ஒரு கம்பளத்தில் மீது இரண்டு ஆண்கள் ஒன்றாக நடந்து வருகிறார்கள்.

அவர்கள் மீது வண்ணக் காகிதங்கள் தூவப்படுகிறது, அந்த இரண்டு ஆண்களில் ஒருவர் மணப்பெண்களுக்கான ஆடையை அணிந்திருப்பது போல உள்ளது.

இதில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுள்ள பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று பொலிசார் தெரிவிக்கவில்லை.

பாலின அடையாளங்கள் அல்லது பாலின சார்பு ஆகியவை தொடர்பாக சவுதியில் தனியாக எந்தவொரு சட்டமும் இல்லை.

ஆனாலும் திருமண உறவுக்கு வெளியில் கொள்ளும் தொடர்புகள், ஓரின சேர்க்கை மற்றும் தவறான நடத்தைகள் ஆகியவைகள் இஸ்லாமிய சட்டப்படி தவறாகும்.

இதை அடிப்படையாக வைத்தே இந்த குற்றங்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்