சவுதியில் தடை நீக்கத்திற்கு பின்னர் திரையிடப்பட்ட முதல் படம் இதுதான்!

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகள் தடைக்கு பின்னர் திறக்கப்பட்ட திரையரங்கில் முதல் படமாக இமோஜி திரைப்படம் திரையிடப்பட்டது.

பொது வெளியில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் பார்ப்பது ஒழுக்கநெறிக்கு எதிரானது என கூறி சவுதியில் 1980-களில் திரையரங்குகளில் திரைப்படம் போடுவது நிறுத்தப்பட்டது.

இந்த தடையானது நீக்கப்படுவதாக டிசம்பரில் இளவரசர் முகமது பின் சல்மானின் அரசு அறிவித்தது.

நாட்டில் நிரந்தரமான திரையரங்குகள் மார்ச் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஜெட்டா நகரில் உள்ள கலாச்சார மண்டபத்தில் தற்காலிக திரையரங்கு அமைக்கப்பட்டது.

இதையடுத்து முதல் திரைப்படமாக இமோஜி திரைப்படம் இங்கு திரையிடப்பட்டது, இதோடு Captain Underpants: The First Epic Movie என்ற அனிமேஷன் படமும் திரையிடப்பட்டது.

சினிமா தொழில் மூலம் 2030-ல் நாட்டுக்கு 24 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என அரசு கணக்கு போட்டுள்ளது.

இதோடு 30,000 நிரந்தர வேலைவாய்ப்புகளும், 130,000 தற்காலிக வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்