சவுதி அரேபியாவில் வரவிருக்கும் புதிய தடை

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
115Shares
115Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் 2020-ல் வெளிநாட்டு தேனீக்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை நாட்டின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய துறை அமைச்சர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

சவுதியில் தேனீ வளர்ப்பவர்கள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு தேனீக்களால் ஏற்படும் பிரச்சனையை அப்துல் ரகுமானிடம் கூறியிருந்தனர்.

அதாவது உள்ளூர் தேனீக்களுடன் கலப்பட இனப்பெருக்கத்தை வெளிநாட்டு தேனீக்கள் மேற்கொள்வதால் உள்ளூர் தேனீக்களின் தூய்மை கெடுவதாக தெரிவித்திருந்தனர்.

இதோடு சவுதி தேனீக்களை உள்ளூர் தேனீக்கள் தாக்குவதாகவும் தெரியவந்துள்ளது. இப்படியே சென்றால் உள்ளூர் தேனீக்கள் இனமே அழிந்துவிடும் என அமைச்சரிடம் தேனீக்கள் வளர்ப்பாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்கான தீர்வை அப்துல் தற்போது தெரிவித்துள்ளார்.

சவுதியில் உள்ள Apis mellifera jemenitica ரக தேனீக்கள் தான் எந்தவிதமான தீவிர காலநிலையையும் சமாளித்து உயிர் வாழும் தன்மை கொண்டதாகும்.

இவ்வகை தேனீக்கள் தான் அதிக தரமான தேன்களை தருகிறது. இது போல தீவிர காலநிலையை பல்வேறு விதமான தேனீக்களால் சமாளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்