பிரமிக்க வைக்கும் உலகின் அடுத்த மிக உயரமான கட்டிடத்தின் வியக்கவைக்கும் புகைப்படம்

Report Print Athavan in மத்திய கிழக்கு நாடுகள்
151Shares
151Shares
lankasrimarket.com

உலகின் அடுத்த மிக உயர்ந்த கட்டிடமான ஜெட்டா டவர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இதன் கட்டுமான பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிவடைந்து திறக்கப்படும் என சவுதி அரேபியா தெரிவிதுள்ளது.

தற்போது உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா தான். இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த பிரம்மாணட கட்டிடத்தையே மிஞ்சும் வகையில் ஜெட்டா கட்டிடத்தின் கட்டுமானம் விறுவிறுப்புடன் நடக்கிறது. இதன் உயரம் 1000 மீட்டர் ஆகும் .

இதன் கட்டுமான புகைபடம் மற்றும் பணி நிறைவடைந்த உடன் எப்படி இருக்கும் என்பதன் வடிவமைப்பு புகைப்படத்தை சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இதன் கட்டுமான செலவு $1.4 பில்லியன் டொலர் ஆகும்.

170 மாடிகளை உடைய இந்த கட்டிடத்தில் நான்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஏழு டூப்லெக்ஸ் அட்லான்ட் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகள், 325 குடியிருப்புகள் ஆகியவை அடங்கியதாக கட்டப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்