நாடு கடத்தப்படும் வாலிபர்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐக்கிய அமீரகத்தில் ஏழைகளின் பணத்தை உறிஞ்சுவதாக அரசை குற்றஞ்சாட்டிய இளைஞரை அங்குள்ள நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் 500,000 திர்ஹாம் (£97,000) அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்தின் துபாயில் பணிபுரிந்துவரும் 25 வயது இளைஞரே அரசுக்கு எதிராக புகார் தெரிவித்தவர்.

இவர், துபாய் சாலை மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மின்னஞ்சலில், ஏழைகளின் பணத்தை உறிஞ்சுவதற்காகவே வாகன ஓட்டிகளுக்கான தேர்வில் தொடர்ந்து வேண்டுமென்றே தோல்வியுற செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

துபாய் நாட்டை பொறுத்த மட்டில் கடுமையான போக்குவரத்து சட்டங்களும், அதே போன்று வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அதிக சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளனர்.

இதனால் தனிநபர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற 5-ல் இருந்து 8 முறைக்கும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது.

ஒவ்வொரு முறையும் அதே அளவு பணம் செலுத்த வேண்டும். இந்த நிலையிலேயே இந்திய இளைஞர் குறித்த புகாரை அரசு மீது சுமத்தியுள்ளார். இளைஞரின் புகாரை துபாய் பொலிசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதில் அரசை ஏளனமாக விமர்சித்த குற்றத்திற்காக 3 மாத சிறை தண்டனையும் 500,000 திர்ஹாம் அபராதமும் விதித்து துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி தண்டனை காலம் முடிவடைந்ததும் அவரை நாடு கடத்தவும் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்