சவுதி மன்னர் எங்கள் சொத்துக்களை அபகரித்து கொண்டார்: அரச குடும்பத்தினர் வேதனை

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதியில், அரச குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட போது அவர்களைத் துன்புறுத்தி சொத்துகளைப் பறித்துக் கொண்டதாக இளவரசர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

சவுதியில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரும், பெரும் தொழிலதிபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் கைதானவர்கள் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது தவறான வழியில் குவித்த சொத்துகளை அரசு கருவூலத்தில் செலுத்திவிட்டு அனைவரும் விடுதலையானதாக கூறப்பட்டது.

ஆனால், கைது செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில், பெரும் சித்திரவதைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளானதாக விடுதலையானவர்களில் பலர் தற்போது புலம்புகின்றனர்.

இதோடு, பெயரளவுக்கே தாங்கள் சுதந்திரமாக உலவி வருவதாகவும், தங்களது சொத்துகள் அனைத்தையும் இளவரசர் முகமது பின் சல்மான் அபகரித்துக் கொண்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரிட்ஸ் கார்ல்டன் சொகுசு விடுதிக்குள் நடந்த சித்திரவதையில், விடுதலையானவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் இறந்து விட்டதாகவும் செல்வந்தர்கள் கூறியுள்ளனர்

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்