ரெட்மியின் அடுத்த அதிரடி! அசத்தும் அம்சங்களுடன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

Report Print Basu in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய சந்தையில் கலக்கி வரும் சீனா நிறுவனமான சியோமி தனது அடுத்த படைப்பான ரெட்மி 4A என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெட்மி 4A, மார்ச் 23ம் திகதி முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே வசதியுடன், Qualcomm Snapdragon 425 ப்ராசசர், அத்துடன் 2GB RAM, 16GB இன்டர்நெல் மெமரி கொண்டுள்ளது.

பின்பக்க கமெரா 13 MP மற்றும் முன்பக்க கமெரா 5 MP-லுடன், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட எம்ஐயூஐ 8 இயங்குதளத்தில் செயல்படும்.

ரெட்மி 4A, கிரே, கோல்ட், மற்றும் ரோஸ் கோல்ட் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை 5,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இதுவரை Flipkart இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ரெட்மி நோட் 4, கடந்த 18ம் திகதி முதல் இந்தியாவின் சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments