பவர் பேங்க் வேண்டாம்.. ஆண்ட்ராய்டு போன் சார்ஜை பாதுகாக்கலாம் எப்படி?

Report Print Printha in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது சீக்கிரமாக போனில் சார்ஜ் தீர்ந்து போய்விடுவது தான்.

மொபைல் சார்ஜை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
  • மொபைல் போன் வைபரேட் மோடில் இருந்தால், பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். எனவே வைபரேட் மோடில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும் போது, சத்தம் கொடுக்கும் இதற்கு ஹேப்டிக் ஃபீட்பேக் (haptic feedback) எனும் ஆப்ஷனையும் ஆப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உங்கள் ஸ்மார்ட்போன் ஆமோல்டட் (AMOLEDED) டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால்பேப்பர்களைப் பயன்படுத்தினால் அது பேட்டரி சார்ஜை அதிகம் குறைக்காது.
  • ஸ்மார்ட் போனில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும்பாலான செயலிகள் நமது இருப்பிடத்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருப்பதால், அது பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும். எனவே அதை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
  • ஸ்மார்ட்போன் செயல்பாட்டினை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது, இயங்குதளத்துக்கான அப்டேட்டுகளை கூகுள் அளிக்கும் போது, ஒவ்வொரு அப்டேட்டுகளை தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.
  • ஸ்மார்ட்போனுடன் நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களுக்கு செல்லும் போது, மொபைலில் ஏர்பிளேன் மோட் எனும் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். இதனால் போன் சார்ஜ் குறையாமல் இருக்கும்.
  • நமக்கு பயன்படாத நேரத்தில் ஜிபிஎஸ், ப்ளுடூத், வைஃபை போன்றவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதனால் மொபைல் போனில் சார்ஜை அதிக நேரம் பாதுகாக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments