ஆண்ட்ராய்டின் தந்தை உருவாக்கிய புது ஸ்மார்ட்போன்

Report Print Printha in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆண்ட்ராய்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஆன்டி ருபின் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தும் மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்தவர்.

தற்போது அவர் தனது சொந்த முயற்சியில் Essential Smart Phone மற்றும் எசன்ஷியல் ஹாம் என்ற இரண்டு கேஜெட்களைக் உருவாக்கியுள்ளார்.

ஆன்டி ருபின் உருவாக்கிய மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள்
  • மொபைல் போனின் முன்பக்கம் முழுவதும் டிஸ்பிளே மூலம் நிரப்பப்பட்டுள்ளது. அதே சமயம் செல்பிக்களுக்கான ஒரு முன்பக்க கேமரா அமைப்பிற்கும் இடம் விடப்பட்டுள்ளது.
  • மொபைலில் மெலிதான bezel- கள் மற்றும் கீழே ஒரு சிறிய தாடை பகுதியும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட முழு டிஸ்பிளே வடிவமைப்பு கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 8 கருவியின் பிரபலமான வடிவமைப்பை பெற்றுள்ளது.
  • எசன்ஷியல் கைபேசியில் பல நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள் உள்ளது.
  • Magnetic Connector-ன் ஒரு வயர்லெஸ் சார்ஜரை மையமாக கொண்ட இக்கருவி 360 டிகிரி புகைப்படங்கள் எடுக்க உதவும் கமெரா அம்சங்களை கொண்டுள்ளது.
  • எசன்ஷியல் வலைத்தளத்தின் படி, இணைப்பு இல்லாமல் இந்த சாதனம் 8 மெகாபிக்சல் முன் பக்க கேமரா மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
  • ரூபின் நிறுவனத்தின் கூற்றுகளின் கீழ் இந்த தொலைபேசியின் பக்கங்கள் டைட்டானியம் கொண்டு தயாரிக்கப்படுகிறது, அது கீறல்களில் இருந்து கருவியை பாதுகாப்பதற்காக உள்ளது.
  • செராமிக் பின்புறம் கொண்ட இந்த தொலைபேசி கருப்பு, சாம்பல், வெள்ளை, மற்றும் தங்கம் போன்ற ஓஷன் டெப்த் போன்ற வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • ப்ரீ ஆர்டரில் முன்கூட்டியே கிடைக்கக்கூடிய இந்த எசன்ஷியல் தொலைபேசியின் விலை 699 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments