அமெரிக்காவில் அறிமுகமானது BlackBerry KeyOne கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com

முதற்தர ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான பிளாக்பெரி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட கைப்பேசி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BlackBerry KeyOne எனும் குறித்த கைப்பேசியானது இரு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது GSM தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், CDMA தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான பதிப்புக்களே அவை.

இதில் GSM பதிப்பினை AT&T மற்றும் T-Mobile போன்ற தொலைபேசி வலையமைப்புக்களுடனும், CDMA பதிப்பினை Sprint மற்றும் Verizon ஆகிய தொலைபேசி வலையமைப்புக்களுடனும் பெற்றுக்கொள்ள முடியும்.

இக் கைப்பேசிகளின் விலையானது 549.99 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்களாக 4.5 அங்குல அளவுடையதும், 1080x1620 Pixel Resolution உடையதுமான தொடுதிரையும், பிரதான நினைவகமாக 3GB RAM, 32 GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments