குறைந்த விலையில் Panasonic அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் Panasonic நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது Eluga I3 Mega எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

advertisement

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் 1.3GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் சேமிப்பு நினைவகத்தினை mciroSD கார்ட்டின் உதவியுடன் 128GB வரை அதிகரிக்க முடியும்.

தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 177 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments