International
Notification
Notification
Submit Cancel

OnePlus 5 கைப்பேசியின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகின

Topics :
advertisement

OnePlus ஆனது சீனாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமாகும்.

இந்நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து வருகின்றது.

இந்த வரிசையில் புத்தம் புதிய கைப்பேசியான OnePlus 5 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசியானது ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்து iPhone 7 Plus இன் வடிவத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

தவிர 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் டுவல் கமெராவானது 13 மெகாபிக்சல்களை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இக் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பும் வெளியாகவுள்ளது எனவும் இது 5.5 அங்குல அளவுடைய Quad HD தொடுதிரை, பிரதான நினைவகமாக 8GB RAM, 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டிருக்கும் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement