அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Oppo R11 Plus கைப்பேசி!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கமெராக்களை முதன்மைப்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துவரும் நிறுவனமாக Oppo திகழ்கின்றது.

இந்நிறுவனம் தற்போது Oppo R11 Plus எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

advertisement

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விசேட அம்சமாக Android 7.1.1 Nougat இங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட Color OS 3.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் 16 மெகாபிக்சல், 20 மெகாபிக்சல்களை கொண்ட டுவல் பிரதான கமெராக்களையும், 20 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4,000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments