அறிமுகமாவதற்கு முன்னரே முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் Huawei Honor 9!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

Huawei நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்நிறுவனம் தற்போது Huawei Honor 9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிக்கான முற்பதிவுகள் இடம்பெறுகின்றன.

அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுமார் 400,000 பேர் முற்பதிவு செய்துள்ளனர்.

5.15 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Kirin 960 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் பிரதான டுவல் பிரதான கமெராவினைக் கொண்டுள்ளதுடன் அவற்றில் ஒன்று 12 மெகாபிக்சல்கள் உடையதாகவும், மற்றையது 20 மெகாபிக்சல்களை உடையதாகவும் காணப்படுகின்றது.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும் கொண்டுள்ளது.

மேலும் 3200 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments