ஸ்மார்ட்போன்களில் ஆங்காங்கே இருக்கும் துளைகள்: எதற்காக உள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் கமெரா மற்றும் பிளாஷ் இடையே அல்லது முன்பக்கத்தின் நடுவில் சிறிய துளை இருக்கும் கவனித்துள்ளீர்களா?

இந்த துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது?

advertisement

இந்த சிறிய துளையானது நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது, சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் சமயம் நமது ஐபோனில் அழைப்பு வரலாம்.

அப்போது போனை எடுத்து பேசினால் மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது சரியாக கேட்காது.

ஆனால் போனில் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் இருப்பின் சிறப்பு ஓடியோ அமைப்பின் காரணமாக மறுபக்கம் நமது குரல் நல்ல முறையில் கேட்கும்.

ஐபோனில் ஒரு முதன்மை ஒலிவாங்கி மற்றும் இரண்டு இரண்டாம் நிலை ஒலிவாங்கிகள் என மொத்தம் மூன்று உள்ளது.

முதன்மை ஒலிவாங்கி ஐபோனின் இடது பக்கத்தின் கீழே அமைந்திருக்கும்.

அதன் முதன்மையான வேலையே தொலைபேசி அழைப்புகள் வரும்பொழுது ஒரு சத்தமான சூழலில் நீங்கள் அழைப்புகளை மேற்கொண்டாலும் கூட தேவையற்ற ஒலியை குறைப்பது தான்.

இரண்டாம் ஒலிவாங்கி ஆம்பியண்ட் ரூம் நாய்ஸ்தனை (சுற்றுப்புற அறை சத்தம்) எடுத்து கொள்கிறது.

ஹெட்ஸெட் ஜாக் அருகே உள்ள இரண்டாம் ஒலிவாங்கியானது முதன்மை மைக்ரோபோனில் லவுட்ஸ்பீக்கரை செயல்படுத்தும் போது செயலில் இறங்கும்.

advertisement

இரண்டாம் நிலை மைக்ரோபோன், முதன்மை ஒலிவாங்கியிலிருந்து சிக்னலைக் கழிப்பதன் மூலம் ஐபோனில் நாய்ஸ் கேன்சலிங் சுற்றமைப்பு வேலை செய்கிறது.

மேலும், ஆம்பியண்ட் நாய்ஸ்தனை மட்டுமே அது பிக் செய்யும்.

அதே போல முதன்மை மைக் ஆனது ஆம்பியண்ட் நாய்ஸ் மற்றும் குரலை பிக் செய்கிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments