iPhone 8 கைப்பேசியில் வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம் சாத்தியமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசியான iPhone 8 ஐ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது வயர்லெஸ் தொழில்நுட்பம் ஊடாக மின்கலத்தினை சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

advertisement

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து iPhone 8 இற்கான துணைப் பாகங்களை வடிவமைத்து வழங்கும் நிறுவனம் ஒன்று குறித்த தொழில்நுட்பம் தொடர்பில் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இத் தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது iPhone 8 கைப்பேசிகளில் வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம் கண்டிப்பாக இடம்பெறும் என தெரிகின்றது.

இது தவிர புதிதாக Apple A11 Processor, iOS 11 இயங்குதளம் என்பனவும் இக் கைப்பேசிகளுடன் அறிமுகமாகவுள்ளது.

இதேவேளை செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவேண்டிய iPhone 8 ஆனது சில சமயங்களில் ஒக்டோபர் மாத ஆரம்பத்திலும் அறிமுகம் செய்யப்படலாம் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments