ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கும் KFC நிறுவனம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

பாஸ்ட் புட்டிற்கு உலகளவில் பிரபல்யம் அடைந்த நிறுவனமாக KFC காணப்படுகின்றது.

KFC நிறுவனம் 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வருடம் குறித்த நிறுவனம் 30 வருடங்களை பூர்த்தி செய்கின்றது.

இதனை கொண்டாடும் முகமாக ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை தனது நாமத்துடன் அறிமுகம் செய்யவிருக்கின்றது.

எனினும் இக் கைப்பேசியினை சீனாவிலேயே அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாக 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution கொண்ட தொடுதிரை, Qualcomm Snapdragon 435 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

தவிர பிங்கர் ப்ரிண்ட் ஸ்கானரினையும் உள்ளடக்கியுள்ளது.

சிவப்பு நிறத்தினைக் கொண்ட இவ்வாறான 5,000 கைப்பேசிகள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியின் கமெராக்களின் திறன் உட்பட விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments