iPhone 8 அறிமுகமாகும் திகதி உறுதிப்படுத்தப்பட்டது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் iPhone 8 எனும் தொடரில் மூன்று வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

வழமையாக ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்திலேயே தனது கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இதனால் இவ் வருடமும் அதே மாதத்தில் தான் iPhone 8 அறிமுகம் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனினும் எந்த திகதி என்பது இதுவரை இரகசியமாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதே மாதம் 22 ஆம் திகதியே விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.

எது எப்படியோ திகதி வெளியிடப்பட்டமை ஐபோன் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்