தாமதமாகின்றது iPhone 8 கைப்பேசிகளின் அறிமுகம்!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வடிவமைப்பில் களமிறங்கி இந்த வருடத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை ஒட்டி iPhone 8 தொடரில் மூன்று வகையான கைப்பேசிகளை இவ் வருடம் அறிமுகம் செய்கின்றது.

வழமையாக செப்டெம்பர் மாதத்திலேயே தனது கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

அதே போன்றே இவ் வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி iPhone 8 கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் தற்போது செப்டெம்பர் 22 ஆம் திகதியே அறிமுகம் செய்யப்படும் என புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

எனினும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்