சிறந்த வசதிகளுடன் Oppo அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து Oppo நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இருந்த போதிலும் ஏனைய வசதிகளும் உயர் தரத்தில் காணப்படுகின்றமையானது Oppo கைப்பேசிகளுக்கு சிறந்த வரவேற்பினை அளிக்கின்றது.

தற்போது Oppo A71 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர 64-Bit Octa Core Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 16GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 200 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்