iPhone 8 முன்பதிவு எப்போது? இதோ திகதி வெளியாகியது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 8 கைப்பேசிகளைத்தான்.

இம் மாதம் 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இக் கைப்பேசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் இன்று வெளியாகியுள்ளது.

இக்கைப்பேசிகளின் அறிமுகம் தொடர்பான அறிவிப்பானது, ஆப்பிள் வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் வைத்து எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது என கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களே காணப்படுவதனால் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்