அதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது Xiaomi!

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்ட Xiaomi நிறுவனம் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Mi Note 3 எனும் இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Qualcomm Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 7.1 Nougat இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், தலா 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் கமெரா மற்றும் 16 மெகாபிக்சல்களை உடைய 16 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 3500 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியின் விலையானது 380 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்