இந்தியாவில் களமிறங்கும் Nokia 8: விலை விபரமும் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

நோக்கியா நிறுவனத்தின் அன்ரோயிட் கைப்பேசிகளில் ஒன்றான Nokia 8 ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Snapdragon 835 Processor தரப்பட்டுள்ளது.

மேலும் பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ள அதேவேளை microSD கார்ட் மூலம் 256GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

இது கூகுளின் புதிய Android 7.1 Nougat இயங்குதள பதிப்பில் செயல்படக்கூடியது.

அத்துடன் தலா 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது இந்திய ரூபாவில் 36,999 ஆகவும், 565 டொலர்களாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்