குவாண்டம் கணனிகளுக்கான புதிய மொழி உருவாக்கம்: அசத்தும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அணுக்கரு, ஒளித்துகள்கள் போன்ற பல்வேறு நுண்ணிய தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்படும் கணனிகளே குவாண்டம் கணனிகள் எனப்படும்.

முழுமை பெறாத நிலையில் தற்போதும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்கணனிகளில் பயன்படுத்தக்கூடிய கணனி மொழியினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

advertisement

இதன் காரணமாக தற்போது பாவனையில் உள்ள C# மற்றும் Python போன்ற பாரம்பரிய கணனி மொழிகள் போன்று அல்லாது மிகவும் இலகுவான முறையில் சிக்கல் தன்மை வாய்ந்த கணனிகளுக்கான புரோகிராம்களை உருவாக்க முடியும்.

எனினும் இம் மொழிக்கு இதுவரை மைக்ரோசொப்ட் நிறுவனம் பெயரிடவில்லை.

எவ்வாறாயினும் குறித்த மொழியில் உருவாக்கப்படும் புரோகிராம்கள் தற்போது உள்ள புரோகிராம்களை விட 30 மடங்கு வேகமாக செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 1976ம் ஆண்டு முதலாவது தனிநபர் கணனியான Altair 8800 உருவாக்கப்படும்போதும் அதற்கான கணனி மொழியினை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கணவே தயார் நிலையில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்