LG V30 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Seylon Bank Promotion

சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வரும் LG நிறுவனம் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

LG V30 எனும் இக் கைப்பேசியினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி Verizon தொலைத்தொடர்பு வலையமைப்பின் ஊடாக ஐக்கிய இராச்சியத்தில் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 2880 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3,300 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

Android 7.1.1 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் கைரேகை அடையாள சென்சாரும் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்