மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

சாம்சுங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது சீனாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Samsung W2108 எனும் குறித்த கைப்பேசியானது 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்