LTE தொழில்நுட்பம் கொண்ட Nokia 3310 கைப்பேசி விரைவில் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in மொபைல்
72Shares
72Shares
lankasrimarket.com

சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த கைப்பேசிகளுள் ஒன்றான Nokia 3310 கைப்பேசியினை அந் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

எனினும் இதனை 2G வலையமைப்பில் மாத்திரம் செயற்படக்கூடியதாகவே அறிமுகம் செய்திருந்தது.

அதன் பின்னர் செப்டெம்பர் மாதமளவில் குறித்த கைப்பேசியினை 3G வலையமைப்பிலும் செயற்படக்கூடிய வகையில் அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இக் கைப்பேசி அமெரிக்காவில் உள்ள AT&T மற்றும் T-Mobile ஆகிய வலையமைப்புக்களின் ஊடாகவே இதுவரை காலமும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் LTE தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் புதிய பதிப்பு அறிமுகமாகும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்