இந்த வருடத்தில் அறிமுகமாகும் iPhone X Plus

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையை அடுத்து இவ் வருடத்தில் இதன் அடுத்த பதிப்பான iPhone X Plus கைப்பேசியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதில் இரு வகையான கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஒன்று LCD திரையினைக் கொண்டதாகவும், மற்றையது OLED திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி இத் திரைகளை LG நிறுவனமே ஆப்பிளிற்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைகளின் அளவானது 6.5 அங்குல அளவுடையதாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்