முதன் முறையாக திரையில் Finger Print தொழில்நுட்பத்தினைக் கொண்டு அறிமுகமாகும் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உட்பட சாம்சுங் மற்றும் சில நிறுவனங்களின் கைப்பேசிகளில் கைவிரல் அடையாள தொழில்நுட்பம் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இவ் வசதியானது திரையின் கீழ்ப் பகுதியிலேயே தரப்பட்டிருக்கும்.

ஆனால் முதன் முறையாக திரையின் மீது Finger Print வசதியைக் கொண்ட கைப்பேசியினை Vivo நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

திரையின் குறித்த இடத்தில் கைவிரல் அடையாளத்தினை வைப்பதன் ஊடாகவே கைப்பேசியினை அன்லாக் செய்ய முடியும்.

சரியான பகுதியை இலகுவாக கண்டுபிடிப்பதற்கான வசதிகள் உள்ளடக்கப்படாமல் இருந்தால் சில சமயங்களில் இவ் வசதி வெற்றியளிக்காமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இதுவரை பெயரிடப்படாத குறித்த கைப்பேசியானது தற்போது வடிவமைப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்