ஐபோன்களின் வேகம் குறைவடைவதை கண்டறிவதற்கு ஆப்பிளின் புதிய யுக்தி

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

நீண்ட காலப் பாவனையின் பின்னர் ஐபோன்களின் வேகம் குறைவடைவது தொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆய்வில் இறங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மின்கலங்களை மாற்றிக்கொள்வதால் வேகத்தை அதிகரிக்க முடியும் என கண்டறிந்ததோடு குறித்த தகவலையும் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு 79 டொலர்கள் பெறுமதியான குறித்த மின்கலங்களை 29 டொலர் பெறுமதியில் மாற்றம் செய்து தருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

எனினும் இதுவரை நடைமுறையில் கொண்டுவரவில்லை.

ஆனால் தற்போது மற்றுமொரு மாற்று யுக்தியை கையாண்டுள்ளது.

இதன்படி வேகம் குறையும் ஐபோன்களின் மின்கலங்களின் ஆரோக்கியம் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கும், மின்கல முகாமைத்துவ வசதியை Turn Off செய்யும் வசதியையும் தரவுள்ளது.

இவ் வசதிகள் அடுத்துவரவுள்ள இயங்குதள அப்டேட்டில் உள்ளடக்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் ABC செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்