OnePlus கைப்பேசிகளை ஒன்லைனில் கொள்வனவு செய்வதில் பாதிப்பு

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான OnePlus ஒன்லைன் ஸ்டோரின் ஊடாகவும் கைப்பேசிகளை விற்பனை செய்து வருகின்றது.

இவ் வசதியினைப் பயன்படுத்தி கைப்பேசிகளை கொள்வனவு செய்ய முயன்ற 40,000 வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது OnePlus இணையத்தளத்தில் தமது கிரடிட் கார்ட்டினை பயன்படுத்தியவேளை கிரடிட் கார்ட் இலக்கம் மற்றும் அதன் முடிவு திகதிகளை ஒப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி பேபால் மூலமாகவும் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இணையத்தளத்தில் தீங்கிழைக்கும் புரோகிராம்கள் செலுத்தப்பட்டுள்ளமையாக இருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 40,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்