அதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் மோட்ரோலா

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com

மோட்ரோலா நிறுவனம் Moto X4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Snapdragon 630 Processor, 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் ஓரிய பதிப்பில் செயற்படக்கூடியது.

நாளைய தினம் அறிமுகம் செய்யப்படும் Moto X4 கைப்பேசியினை பிளிப்கார்ட் தளத்தினூடாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்