iPhone X கைப்பேசியின் முக்கிய குறைபாடு தொடர்பில் விசாரணையை ஆரம்பித்தது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 8, iPhone 8 Plus என்பவற்றுடன் iPhone X எனும் கைப்பேசியினையும் அறிமுகம் செய்திருந்தது.

இவற்றுள் iPhone X கைப்பேசிக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

எனினும் இக் கைப்பேசியில் உள்வரும் அழைப்புக்ளை மேற்கொள்ளும்போது அவை நேரம் தாழ்த்தியே கிடைக்கப்பெறுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது உள்வரும் அழைப்புக்கான தொலைபேசி மணி ஒலித்து 6 தொடக்கம் 8 செக்கன்களின் பின்னரே திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றது.

இக் குறைபாடு தொடர்பாக ஒன்றிற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பயனர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக் குறைபாடு எதனால் ஏற்படுகின்றது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்